மாறிக் கொள்கிறேன் நான்

சைபீரிய காடுகளின்

நடுவே ஒரு குகையில்

கண்டெடுக்கப்பட்ட

கால்கள் சிறுத்து

உடல் , மூளை பெருத்து

காணப்பட்ட..

மூன்று லட்சம்

ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த

நியாண்டர்தால் மனிதனின் எலும்புக்கூடா நீ..?



அல்லது ..

அவர்களுக்கும் எங்களுக்கும்

இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த

டெனிசொவான் மனித இனமா நீ..?



எங்களோடுதானே வாழ்கிறாய்..

எங்களைப் போல்தானே உண்கிறாய்..

எங்களிப்போலவே தானே மரிக்கிறாய்..

எந்த விதத்தில்

எங்களிடமிருந்து மாறுபடுகிறாய் நீ..?



உனக்கும் எங்களுக்கும்

உள்ள வித்தியாசம்தான் என்ன..?

உனது வர்க்க வெறியாட்டங்களையும்..

உனது இன, மத, சுயநல வேட்கைகளை

உனது செயல்பாடுகளை

பார்க்கையில் ..



ஒரு டெனிசொவனாகவொ..

ஒரு நியாண்டர்தால் மனிதனாகவோ..

கூட மாறி விட்டுப் போகிறேன் .. நான்



குறைந்தபட்சம்

ஒரு மனிதனாக

இருக்க முடியும் உன்னால்

என்றால் !

எழுதியவர் : கருணா (பாலகங்காதரன்) (21-Apr-16, 4:09 pm)
பார்வை : 384

மேலே