சித்திரை மகளே வருக

***** சித்திரை மகளே வருக
***** தமிழ் தாயின் தலை மகளே வருக
***** தமிழ் வருடம் மொத்த மாதம் பனிரெண்டாம்
***** அதில் கன்னி மாதமாய்
***** கணினி காலத்திலும் தவழும்
***** சித்திரை மகளே வருக
***** எம் தமிழரின் மழலை மகளே வருக
***** புது நெல்லு புத்தரிசி புத்தாடையோடு
***** புத்துயிர் பெறுமே
***** இந்த புத்தாண்டு உன்னால்
***** மாரி யெங்கும் பொழிய
***** கழனி யெங்கும் உழவு தழைக்க
***** வறுமை யெங்கும் களைய - தமிழன்
***** பெருமை யெங்கும் ஓங்க
***** புதுமைகள் பல படைக்க
***** கயமைகள் யெங்கும் நீங்க
***** புதிய தோர் தொடக்கமாய்
***** எங்கள் சித்திரை மகளே வருக