புதிய நியதி

பழையன புதியன இல்லை,
வளர்த்துக்கொண்ட உறவினில்,
நீ இருக்கிறாய் நிலையாய்,
எனது கவனத்திலும்,
வெறுப்பின் படலத்திலும்,
உலகமெனக்கொண்டாய் ஒரேமுறை,
அன்றிருந்தே உனது சுழலில்,
எனவேதான்,
எல்லாமுமாய் நீ நிஜத்திற்கு !
நிழல் பயன்கள் பெரிதானதல்ல !
தெரிந்தவரை,
எனக்கான நேரம் ஒதுக்குதல் !
குதிரைக்கொம்பு உனக்கு !
நேசித்து வாசித்து பூசித்து,
வசித்து கிழித்துவிட்டாய் என் வரைபடத்தை !
உடைந்தது ஒட்டாது !
என்ற பீங்கான் வாதம்,
பிறை நிலவாவதற்க்கு !
எதிர்மறை வாதங்கள்,
என்ன முடிவு தந்துவிடும்,
நேசித்த நெருப்பு உறவுக்கு !
நீ சொல்ல தீக்குளிக்கும் பிள்ளைதான் !
அதைச்சொல் !
வெறுக்கிற நேரம் !
எட்டாத மதி கிட்டி இரையாகும் விதிக்கு !
அடியே !
உன் அசைவுகள் தொடங்கி,
கால்தடங்கள் அறிவேன் !
முடியாது நான் இனி உன் உலகுக்குள் புக !
தனித்துவிடப்பட்டவனால் !
கிழித்து எறியப்படும்,
தேவதைப்புகைப்படம் நீ !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (22-Apr-16, 9:22 pm)
பார்வை : 73

மேலே