உறவுக்கு உயிர் கொடுத்திடு

காலை நேரம் தோன்றும் வானம் நீ !!!
புது விடியல் தேடும் பூமி நான் !!!

இருவிழி நோக்கையிலே புதிதாய் ஒரு ஒளி ...
இமைகள் மூடிடவே மெலிதாய் சிறு வலி....

கண்டேன் பெண்ணே ......உன்னை
சேர்த்தேன் எந்தன் இதயத்திலே
காற்றாய் நீயும் ...
கலந்தாய் என் மூச்சினிலே !!

ஆசையில் ஓர் அஞ்சல் வரைந்தேன்
மேசையில்.... அது உன் பார்வையில்
சேர்த்திட வைத்தேன்
கண்டாய் நீயும் !!!
கொண்டேன் நானும் உனை நெஞ்சிலே..

தேய்ந்து வளரும் நிலவாய் நாளும்
உனை பார்த்து வாழ்ந்தேன் நானும்
நீ ஏங்கிட ....
நான் தூங்கிட....
ஒரு வழி சொல் கண்ணே ...

விட்டுச் செல்லும் எண்ணமில்லை
நீயின்றி வண்ணமில்லை
வாழ்விலே......என் வாழ்விலே
வானவில்லும் நீயே...
எனை வெல்லும் விழியும் உனதே ...

சேர்ந்திடு....
எனை உன்னில் சேர்த்திடு
உயிர் கொடுத்திடு ....
நம் உறவுக்கு ....

எழுதியவர் : உதயநிலா (23-Apr-16, 2:03 pm)
பார்வை : 78

மேலே