நீர் இன்றி அமையாது உலகு - தொழிலாளர் தின கவிதைப் போட்டி

மின் தட்டுப்பாடு
மிக சாதாரணமாகிவிடும்,
ஒட்டு மொத்த குடி நீர்
தட்டுப்பாடு வரும் போது

உலகில் முக்கால் பங்கு
நீர் இருந்தும்
கால் பங்கு நிலத்தை
கனவாய் கண்ட
மீன் செத்தது!

கடல் நீர்
உலக அளவு
ஆர்வத்துடன் தான்
இருக்கிறது...
நமக்கு தான்
முழங்காலுக்கு மேல்
நனைவதற்கு ஆர்வமில்லை

காய்ந்த பாலையில்
கானல் நீர் பார்க்கிறேன்...
ஈர சாலையில் கானல் தாகம் பார்க்கிறேன்


பிரபஞ்சமே நம்மை பாதுகாக்க
சுழல்கிறது
பிரபஞ்சத்தின் ஒற்றைத்துளியை பாதுகாக்க
நமக்கு எத்தனை சவால்கள்

நீங்கள் வற்ற வைத்த
நதிகளுக்கும்
விட்டு வைத்த நதிகளுக்கும் சேர்த்தே

மிகப்பெரிய கண்ணீருடனும்
பேரிரைச்சலுடனும் காத்திருக்கிறது
பிரபஞ்சத்தின் ஒற்றைக் கடல்!

எழுதியவர் : இளந்தென்றல் கு.திரவியம் (23-Apr-16, 1:13 pm)
பார்வை : 227

மேலே