முகமூடி

உண்மை முகம்
அழகென்று தோன்றவில்லையெனில்
ஒரு முகமூடி
முகமாகிப் போகிறது !
உண்மையே அழகென்னும்
உண்மை உணர்ந்தால்
முகமூடி
குப்பைக்குப் போகக்கூடும் !
பேரழகுப் பெண்கள்
எப்போதும்
முகமூடிக்குள் இருக்கிறார்கள்
தேவையற்ற தொல்லைகளைத்
தவிர்க்கும் ஒரு யுக்தியாக !
பிரபலங்களின் மூகமூடி
பிரசித்தம் .
கூட்டத்தின் பிடியிலிருந்து
தப்பிப் பிழைக்க
அதைவிட்டால் வழியில்லை !
கடவுள் எப்போதும்
முகமற்றே இருக்கிறார்
வேண்டியவர்களுக்கு
முகத்தைக் காட்டிக்கொண்டும்
மற்றவர்களுடன்
கண்ணாமூச்சி
ஆடிக்கொண்டும் !

எழுதியவர் : மதிபாலன் (23-Apr-16, 8:33 pm)
Tanglish : mugamoodi
பார்வை : 127

மேலே