செவிச் செல்வம்
செல்வத்துள் சிறந்த செல்வம்
செவி செல்வம்
காதுகளின் கூர்மையினால்
கேட்கும் திறனால்
ஒவ்வொரு விஷயத்தையும்
துல்லியமாக உணர உதவுகிறது
உலகம் முழுவதையும்
கேள்வி ஞானத்தாலே
அறிந்து கொள்ள முடிகிறது
கேள்வி அற்றவன்
கண்கள் இருந்தும் குருடனே
கேள் மனிதா கேள் /
உலகில் என்னென்ன நடக்கிறதோ
அத்தனையும் மனிதனின் செவிக்குள்ளே
புகுந்து விட்டால் அவன் ஒரு ஞானி தான்
அவன் ஒரு விஞ்ஞானிதான்
உலகை அளந்தவன் கேள்வி உற்றவனே
செவிச் செல்வம் மனிதனின்
அளப்பரிய செல்வம்
கேட்பதனால் அளப்பரிய அறிவை
அள்ளி தெரிகின்றான் மனிதன் ,
அறிஞன் ஆகின்றான்