நூலகம்

கோடிக்கணக்கான அறிவு பொக்கிஷங்களை
தன்னகத்தே கொண்டிருக்கும்
பெருமூளை இது..
வாசிக்க வந்தவருக்கு
புது தெம்பூட்டும்
ஜெயிக்க வழிகாட்டும் உந்துசக்தி இது..
சீராய் அடிக்கியிருக்கும்
ஒவ்வொரு நூலும்
நம் வாழ்க்கை சீராக உதவிடும் சீர்ஆக்கி...
நூல்கள் படிக்கும் போது பல புயலை மனதில் ஏற்படுத்தும்
ஆனால் நூலகமோ
எனக்கு எதுவும் தெரியாது என்பது போல அமைதி காக்கும்
வருகைப்பதிவேட்டின் பக்கங்கள்
இன்னும் பல வாசகர்களின் கையெழுத்திற்காய்
எதிர்பார்ப்புடன் ஏங்கியே இருக்கின்றன இன்றும்...