கற்க கசடற‌

வள்ளுவம் வாழ்வதெங்கே
தமிழ் புத்தகத்தில் மட்டும் தானோ
வள்ளுவம் வழிநடப்போர்
நாளும் குறைந்திடல் குற்றம் தானோ

என்றோ எழுதியவை
இன்றும் இருக்கு நம்மை வழிநடத்த‌
நன்றாய் இருப்பதற்க்கு
திருக்குறளில் நிறைய வழி இருக்கு

கற்க கசடறவை
மட்டும் நன்றாய் கற்றுக் கொண்டோம்
சொல்லும் பொருள்மறந்து
நடக்க தொல்லைகள் பெற்றுக் கொண்டோம்

வாய்மையும் ஈகையும்
படித்து மறந்திட அது முறையோ
அறம்பொருள் இன்பங்களை
படித்து நடந்திட அழைப்போம் தலைமுறையை

இரண்டடிக்குள் உலகத்தையே
அடக்கி வைத்தார் வள்ளுவர் குறளாலே
அச்சொற்படி நடந்திட்டாலே
நல்லது உலகத்திற்கே வள்ளுவம் வாழவைப்போம்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (24-Apr-16, 8:42 am)
பார்வை : 5026

மேலே