வீணாக்க வேண்டாம் பசியாற்றுவோம்
உணவு
பலருக்கு இன்றும் கனவு..
பலர் உதறும் பருக்கைகள்
சிலரின் பசி போக்க போதுமானது..
பலரின் ஆடம்பர நிகழ்ச்சிகளில் வீணாகும் உணவு
பலரின் குடும்பங்கள் சில மாதம் பசியாற்ற போதும்...
நாம் வாழ்வது இந்த வயிற்றிற்கே
நாம் உழைப்பது தவறாத உணவிற்கே..
உணவு இல்லாதவர் வயிறு வற்றி
உணவால் குண்டானவர் நோய்கள் பற்றி
உணவில் பலவகை
ஒவ்வொருவருக்கும் பிடிக்கும் ஒரு வகை...
ருசியில்லா சத்தான உணவும் உண்டு
ருசியுள்ள சத்தில்லா உணவே இன்று
ஒரு வேளை உணவு அனைவருக்கும் கிடைத்திட்டால் போதும்
உணவில்லாதோருக்கு உணவிடுவோம் ஒரு வேளைக்காவது உதவிடுவோம்..