ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே – மாண்டு ராகம்
பாவை விளக்கு (1960) திரைப்படத்தில் கவிஞர் மருதகாசி இயற்றி, K.V. மகாதேவன் இசையமைப்பில் சிவாஜி கணேசனுக்காக C.S. ஜெயராமன் மாண்டு ராகத்தில் பாடிய அருமையான பாடல் ’ ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே’.
ஆயிரங் கண் போதாது வண்ணக்கிளியே ….
ஆயிரங் கண் போதாது வண்ணக்கிளியே
குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே
தென்றல் இசை பாடி வரும் தேனருவி ஆடிவரும்
தென்றல் இசை பாடி வரும் தேனருவி ஆடிவரும்
அன்றலர்ந்த செண்பக பூ வண்ணக்கிளியே
அன்றலர்ந்த செண்பக பூ வண்ணக்கிளியே எங்கும்
ஆனந்த காட்சி தரும் வண்ணக்கிளியே
ஆனந்த காட்சி தரும் வண்ணக்கிளியே (ஆயிரம் கண் போதாது)
எங்கும் பனி தூங்கும் மலை …….
எங்கும் பனி தூங்கும் மலை வண்ணக்கிளியே நெஞ்சில்
இன்ப நிலை தந்திடுதே வண்ணக்கிளியே
எங்கும் பனி தூங்கும் மலை வண்ணக்கிளியே நெஞ்சில்
இன்ப நிலை தந்திடுதே வண்ணக்கிளியே
பொங்கி வரும் ஐந்தருவி வண்ணக்கிளியே
பொங்கி வரும் ஐந்தருவி வண்ணக்கிளியே இங்கு
சங்க தமிழ் முழங்கிடுதே வண்ணக்கிளியே
சங்க தமிழ் முழங்கிடுதே வண்ணக்கிளியே
(ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே)
மந்தி எல்லாம் மாங்கனியை பந்தாடி பல் இளிக்கும்
மந்தி எல்லாம் மாங்கனியை பந்தாடி பல் இளிக்கும்
சந்திரன் போல் சூரியனும் வண்ணக்கிளியே
குளிர்ச்சி தந்திடுவான் இன்று எங்கும் வண்ணக்கிளியே (ஆயிரம் கண் போதாது)