அன்பே ஓவியமே இணைவோம் காதல் காவியமாக

கடுகொரு காதல் கணை தொடுத்து
என் இரும்பிதயம் துளைத்தஓவியமே!
என் இதயம் பூவாக
அதில் நீ தேனாக வேண்டுமடி!
உன்வாழ்வு தெப்ப குலமாக
அதில்நான் தாமரையாக வேண்டுமடி!
நான் மண்ணாக நீ மழையாக
நம்வாழ்வு மரமாக தழைக்குமடி !
உன்கரங்கள் என் கரம்கோர்க்க
துன்பமெல்லாம் தூரப் பறக்குமடி!
உன்கண்கள் என் கண்களை
நோக்க கோபமெல்லாம் கரைந்துபோகுமடி !
காலம் நம்இரு கரங்களையும் தூரப்பிரித்தாலும்
காற்றின்கரங்களாள் நம்இரு இதயங்களை கோர்போமடி!
தோல்வியால் நான் துவண்டு போனாலும்
உன்னநிலவின்பத்தாள் வாழ்விற்கு சுடரொளி தருவாயடி !
என் இதயம் உன்இதயம் ஒன்றாக நமக்கோர்
இதயம் பிறக்க அதற்காக வாழ்வோமடி !
நம் உயிர்களை பிணைத்து அன்பால்
கூடு கட்டி வழ்வோமடி !
உடலால் அழிந்தாலும் உயிரால் உலகின்
உள்ளங்களில் நிறைவோமடி காதலின் காவியமாக ....

எழுதியவர் : காமேஷ் (23-Apr-16, 9:45 pm)
பார்வை : 106

மேலே