!!!மௌனத்தின் தாக்குதல்!!!
மௌனம் பெண்களின்
வலிமையான ஆயுதம்
பேசாமலேயே தாக்கப்பட்டு
கொல்லாமலேயே கொல்லப்படுவாய்....
அவள் பேசமாட்டாளா?
என்ற ஏக்கத்திலேயே
நொடிக்கு நொடி
உயிர் பிரியும்
பிரிந்த உயிர்
அவளையே சுற்றித்திரியும்....
பைத்தியம் பிடிக்கும்
பசியும் மறக்கும்
உயிரின் நரம்புகள்
குமுறி அழுகும்...
திசைகள் அறியா
கால்கள் நடக்கும்
தூரத்தில்
அவள்போல்
உருவங்கள் தெரியும்...
எல்லாம் இருந்து
இழப்புகள் தழுவும்
இரவு நிலவும்
உனக்காய் அழுகும்...
தழுவும் தென்றல்
கேலியாய் சிரிக்கும்
தலையில்
இடி வந்து
அடிக்கடி தாக்கும்...
கண்களின் பிம்பம்
கண்ணீரில் கரையும்
காதல் தீயில்
உயிர் பற்றி எரியும்...
ஒவொரு நொடியும்
உன்னை
கொன்றுபோடும்
கொலையின் குற்றம்- அவள்
மௌனத்தை சாரும்...
உயிரின் செல்கள்
ஒவ்வொன்றாய் சாகும்
உடலின் இயக்கங்கள்
தடைபட்டு போகும்...
வெள்ளை அணு
சிகப்பு அணு
இரண்டும் அழுது
நோயை எதிர்க்கும்
சக்தியை இழக்கும்...
இதற்க்கெல்லாம்
மருந்து
எங்கே இருக்கு? - அந்த!
திருட்டு சிறுக்கியின்
வார்த்தையில் இருக்கு...
மௌனத்தின் தாக்குதல்
போதும் பெண்ணே - கடும்!
சொற்களின் தாக்குதலை
தொடர்ந்திடு கண்ணே...!!!