நீ என்னோடு
நீ எனக்கு...
உன்னை பார்த்த நொடியில்
நீ என்னோடு என்று...
என் நினைவு...
ஏமாற்றம் இல்லாத
என் வாழ்க்கையில்...
ஏமாற்றம் தந்தது...
என் காதல்...
விட்டு சென்ற என் காதலி...
உலகில் இல்லை...
என் காதல்
மீண்டும் துளிர ...
என் ஏமாற்றம்...
மீண்டும் தொடர...
என்னவள் இல்லை...
என்ற பின்...
விட்டு விலகி...
நட்புடன் நான்...
ஏதேனும் ஒன்றில்...
நிலையாய் நான்...
நட்பின் கற்பில்...
வாழ்வேன்....
காதலின் கற்பில்...
சிறிய தடுமாற்றம்...
பிறகென்ன கற்பு?
கேள்வி புரிகிறது...
தீக்குளித்து புரிய செய்ய ..
ஆண் சீதை...
நானில்லை...
ஆண் ஜென்மம் நான் ...
என் ஏமாற்றம்...
எரிய செய்து...
நட்பை கற்பாய்...
காப்பேன் நான் ...
இதயத்தில் உள்ள...
கோவிலில்...
என் தேவியோடு நீ...
தவறு புரிகிறது...
கோவிலில் உள்ள...
அஸ்தியோடு,
அஸ்திவாரமாய் உன் நினைவு.....
என்ன இந்த...
கற்பு நாடகம்...
சராசரி மனிதனாய்...
சபலப்பட்டு...
சத்தியமாய்...
தவறிவிட்டேன்...
சாகும் வரை...
அவள்தான் இனி...
சபலமல்ல...
இதுவும் காதல்தான்...
மன்னித்துவிடு...
மறந்து விட்டேன்...
பொய் சொன்னாலும்...
போராடுவேன் உன்.நினைவகற்ற...
அதையும் விடவில்லை...
இதையும் விட முடியவில்லை...
என்ன செய்ய...
என் நினைவகற்ற...
அவள் இல்லாமல்
நிலை தடுமாறி...
நான்...
மரணம் என் ...
மனதில்..
இதய கோயில்..
அல்ல
இரு கோயில்...
தீபங்களையும்..
எரிய செய்யட்டும்...
என் தீபம் அவளோடு...
என் நினவு அவள் கல்லறையில்...
என் ஏழாவது நாள்....
உயிர்ப்பு மீண்டும்
உன்னோடு.
மீண்டும் மரித்தேன்...
நீ இன்னொருவன்,,,
சொந்தம் எனும்போது...
நன்றி என்...
காதல் தீபங்களே...
ஒன்று அணைந்தாலும்...
மற்றொன்று எரிகிறது....
மற்றொருவன் இதயத்தில்...
வாழ்க என்றும் வளமுடன்...
என்றென்றும் நலமுடன்-- ஆனந்த் வி