இடைப்பட்ட காலம்

பிறப்பிற்கும் இறப்பிற்கும்
இடையே கிடைப்பது சொர்க்கம்
அதை நரகமாக்குவதில் நாம் உச்சம்
வாழ்நாள் நமக்கு கிடைத்த கொடை
அதில் வன்மம் நிரப்பி
அன்பானோரை குழப்பி
சாதிமத சாயம் பூசி
தேவையில்லா பேச்சை வளர்த்து
நிறைகளை விட்டு
உள்ள குறைகளால் வாழ்வின் பக்கம் நிறைத்து
நேற்றை பிடித்துக்கொண்டு
நாளையால் துக்கம்கொண்டு
இன்றை இந்நொடியை இந்த வரத்தை மறந்து
வாழும் பூமியை மாசாக்கி
இயற்கையை அழித்து
விலங்குகளை அடிமைப்படுத்தி
பெரியவன் சிறியவன் என விவாதம் எழுப்பி
சட்டென ஒரு நொடியில்
ஒரு தூசி போல இல்லாமல் போகின்றோமே
நம்மை படைத்தற்காய் இறைவன் வெக்கப்படுகிறான்
நாளும் எங்கோ ஒளிந்து நின்று துக்கப்படுகிறான்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (24-Apr-16, 9:02 am)
Tanglish : idaippatta kaalam
பார்வை : 676

மேலே