உலகம் உங்கள் கையில்

வருங்காலமெனும் கோட்டையின் தூண்கள்
வருங்காலமெனும் ஆலமரத்தின் விழுதுகள்
வருங்காலமெனும் வரலாற்றின் எழுதுகோல்கள்
வருங்காலமெனும் அரணமனையின் மன்னர்கள்
வருங்காலமெனும் ஓவியத்தின் வர்ணங்கள்
வருங்காலமெனும் காவியத்தின் கதாநாயகர்கள்
வருங்காலமெனும் ஜாதகத்தின் நற்பலன்கள்
வருங்காலமெனும் சூரியனின் ஒளிக்கதிர்கள்
வருங்காலமெனும் பூமியின் புதையல்கள்
வருங்காலமெனும் இன்னிசையின் ராகங்கள்
வருங்காலம் இவர்களை நம்பியே
வருங்காலச் சிற்பிகளே மாணவர்கள்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (24-Apr-16, 9:32 am)
பார்வை : 3455

மேலே