10 செகண்ட் கதைகள் - காதல் உயர்திணையோ, அஹ்ரினையோ
அவள் வீட்டு வழியே செல்கையில் எப்போதும் திறந்திருக்கும் அவள்
சன்னல் கதவுகள் இப்போது மூடியே இருக்கின்றன
எங்கு போயிருப்பாளோ திரும்ப வருவாளோ என்ற தவிப்பில் திரும்பத் திரும்ப
அந்தத் தெருவில் போய்க்கொண்டே இருந்தேன்
பின் மூடிய சன்னல்களையே அவளாகப் பாவிக்கத் தொடங்கினேன்
மற்றும் மெள்ள உரையாடலை ஆரம்பித்தேன்
நான் பேசப் பேச மெளனத்தையே பதிலாக அளித்துகொண்டிருந்தாள்
அவள் பேசாத சொற்களில் காதலின் ஆழத்தைப் புரிந்தேன்
தினமும் அங்கு போவதும் அவளைக் காண்பதுமாக நாட்கள் கழிய
என் இதயத்தை முழுவதுமாக அவளிடம் கொடுத்துவிட்டேன்
சன்னல்களாகிவிட்ட அவளிடம் பேசிக்கொண்டிருக்குமென்னை
பைத்தியக்காரனென சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.