காதல் வினா
கலைநயம் காட்டியக் கண்களில், காதல்நயம் கோர்த்து வருவாயோ? உயிர்மெய் எழுத்துக்களை ஒன்றிணைத்து,
எனைக் கவிதைகள் எழுதப் பணிப்பாயோ?
நெருக்கத்திலே நெருடும் உன் மூச்சுக் காற்று,
அடைமழையும் அனல் வெயிலும் ஒருசேர எனக்களிப்பாயோ? மகரந்தக் கைகளில் மலர்மயமாய் மருதானிக் கோலம்,
அதை வட்டமிடும் வண்ணத்துப்பூச்சியாகும் வரமொன்றும் தருவாயோ?