என் உயிரை ரசிக்கிறேன் உன் உருவில்

மற்றவைகள் எல்லாம் மரணத்தில் மரணிக்கும் காதல்
நம் காதலோ மரணத்தை தாண்டியும்
தொடர்ந்திடும் காதல்

நீ பேசும் பொழுது
என்னில் ஏதோ ஆகிறது
என் இதயத்தில்
நீ நுழைந்து
எனை சாய்க்கிறாய்

உனை பார்க்கும் பொழுது
மனதில் ஏற்படும்
ஆர்ப்பரிப்பை
எப்படி சொல்வது ?

என்னில் தோன்றும்
மாறுதல்கள் உன்னில்
எழுகிறதா
எனை தூண்டிவிட்டு தூண்டில் போடும்
மாயக்காரா
சிக்கிக்கொண்டேன்
உன்னில்
சொல்லாமல் போனது எங்கே
அங்கே நான் இருக்கிறேனா

உடல் பொய்யாகும்
காதல்
உயிர் மெய்யாகும்
காதல்
எங்கள் காதல்

என் உடல் இறந்தாலும்
உயிர் உன்னில் வாழ்ந்து
கொண்டே இருக்கும்

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (25-Apr-16, 5:35 pm)
பார்வை : 123

மேலே