மலரொரு புத்தகம்
மலர் ஒரு புத்தகம்
இதழ்கள் தென்றல்
திருப்பும் பக்கங்கள் !
வார்த்தைகள் வரிகள்
தேன் சொட்டுக்கள் !
ரசித்துப் படிப்பவன்
கவிஞன் !
----கவின் சாரலன்
மலரொரு புத்தகம் ,தென்றல் திருப்பிடும்
பக்கங்கள் மென்னிதழ்கள், வார்த்தை வரிகள்
நறுந்தேன் சுவைச்சொட்டு, ஏந்திப் படிப்பவன்
நல்ரசிகன் தேன்கவி ஞன் .
---வரிகளின் யாப்பு வடிவம் . வெண்பா
வெண்பா முயல்வோர் தளை கருதி வரிகள் எப்படி மாற்றி அமைக்கப் பட்டிருக்கிறது
என்பதைக் கவனிக்கவும் .