பல்லாண்டு காத்திருப்பு

உள்ளக் கிடக்கைகள்
உதிர்வதில்லை..எப்போதும்
உணர்வுகள்..
உள்ளார்ந்தமாய்
உணரப்படுகையிலே தான்..
உறவும்..
உரிமையும்.....உருவாகும்..


பல்லாண்டு காத்திருப்பு....
கைகூடும் போது..
பரவசத்தின்.. பார்வை..
பரிணாம விரிவு காணும்..
பறவையாய்..ஆகிடுமே மனவூஞ்சலும் கூட..


உதரத்து உணர்வுகள்..
உள்ளத்தினை தொடுகையில்..
உருவாகும் உறவுகள்..
உண்மையில் உறுதியானவையே...


உடல் வாடை
உணர்ந்து உருவான
உறவுகளை காட்டிலும்
உயிர் வாடை உணர்ந்து..
உருவாகும் உறவுகள்..
உன்னதமானவையே...


உணர்வுகளின் பரிமாற்றத்திற்கு
ஊடகங்கள் தேவையில்லை
உள்ளத்திலிடமொன்று உண்டானால்.
அதுவேஉபகாரமன்றோ


உன்னோடு பேசியபோது
தமிழோடு..பேசியதுபோலே..
தமிழை ஊட்டியவள்
ஊட்டிவளர்த்த வாரிசு..
தமிழுக்காக.. தலைவணங்கி
தட்டிவிட்டு வந்தாயே..
மரணவாசலையே..அப்போதே..
தரணியில்..தமிழ்தாய்..தந்துவிட்டாள்..
தன் பொறுப்பில் பாதியை..
தன் மகன் கரத்தினில்..
உன் பொறுப்பில்..பத்திரமாய்..
நீ பயில்கின்றாய்..-இடையே..
படமெடுத்தாற் போல்..உன்பார்வை படுகையிலே..
பல்லாண்டு காத்திருப்பு....
கைகூடும் போது..
பரவசத்தின்.. பார்வை..
பரிணாம விரிவு காணும்..
பறவையாய்..ஆகிடுமே மனவூஞ்சலும் கூட..

எழுதியவர் : அஜந்தா ஜினி பஹீர் (26-Apr-16, 1:22 am)
பார்வை : 60

மேலே