கை கழுவிய காதல்

வெட்டிவேலை செய்பவனுக்கு
விரும்பிக் கொடுத்தாலும்
கொடுப்பேனே தவிர
வேலைவெட்டி இல்லாதவனுக்கெல்லாம்
கொடுக்கமாட்டேன் என்ற
கொட்டுந்தேள் வார்த்தைகள் கொடுத்த
வலியில் சொல்ல மறந்து
வேலை தேடிக்கொண்டு
வீராப்பாய் உன் வாசலுக்குள் நுழைந்தேன்

மூத்தவள் இருக்க இளையவளை
கட்டிக் கொடுத்து அவ வாழ்க்கை
பாழாக விடமாட்டேன்.. எல்லாத்துக்கும்
கால நேரம் வரும் என்ற
பொறுப்புள்ள தந்தையின் மனதை
புரிந்து முன் வைத்தக் காலை
பின்வைத்து நடந்தேன்

மூத்தவளுக்கு வரண்தேடி
முகூர்த்தக் கால் ஊன்றிய
சேதி காற்றலையில் மிதக்க
அதை நம் காலுக்கு ஊன்றிய
முகூர்த்தக் காலாய் எண்ணியே
என் கால்கள் உன் வாசலை நெருங்க ..
மூத்ததைக் கட்டிக்கப்போறவனுக்கும்
எனக்கும் மச்சான் உறவான சொந்தம்
உன்னை என் தங்கையாக்கி
காதலை கை கழுவ விட்டிரிச்சே ..

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (26-Apr-16, 2:39 am)
பார்வை : 144

மேலே