புது மழை

உதிராத இலைகள் கூடி
தென்றலின் வருடல்களில்
நடனமிட்டு புரியாத
மொழியிலேனும்
புன்னகை பூத்திருக்க

சுள்ளிகளை சுமந்து வந்து
உங்களது அருகாமையில்
கூடு ஒன்றில் வாழும்
பறவையின் குஞ்சுகள்
உங்களோடு பகற்பொழுதில்
பேசிக் களித்திருக்க

புதுநெருப்பை
கூடு அழிய வைத்திடவே
கருமை நெஞ்சினன்
ஒருவன் தூரத்தில் வர
இலைகள் எல்லாம்
படபடத்து
அனுப்பிய செய்தியினால்
திரண்டு வந்த மேகத் தாயவளின்
கருணையினால்
பொழிகிறது புது மழை !

எரிதழலின் அனல்கங்குகளில்
இருந்து மீண்டவனாய் நானும்
உன் பசுந்தரையில்
மண்டியிட்டு நிமிர்ந்து
உன் முகம் காண்கிறேன்
மேகமெனக்கு ..

நீ..

தளிர் இலையாக
கூடு பிழைத்த மகிழ்ச்சி
கொண்டவனாக

நான்!

எழுதியவர் : கருணா (பாலகங்காதரன்) (26-Apr-16, 10:15 am)
Tanglish : puthu mazhai
பார்வை : 59

மேலே