சிந்துப்பாடல் --- வளையற் சிந்து --- 5
கண்ணனவன் குழலிசையில்
கண்ணியர்கள் உள்ளம் -- உணர்
கானமிசை வெள்ளம் -- மனக்
காவியத்தின் பள்ளம் -- எனக்
காசினியில் மங்கையர்கள்
கண்டிடுவார் கள்ளம் .
பண்ணிசையில் மயங்குகின்ற
பாவையர்கள் உண்டு -- தினம்
பாசமிகுத் தொண்டு -- இப்
பாரினிலே உண்டு -- எனப்
பார்த்தவர்கள் பரவசமாய்ப்
பாடிடுவார் கண்டு .