சிந்துப்பாடல் --- வளையற் சிந்து --- 4
நிலாமுற்றத்தின் அரும்பணிகள்
நித்தியத்தின் நேசம் -- நம்
நிழலினது தேசம் -- வான்
நின்றிடுமே பாசம் -- தினம்
நிசங்களையே செப்பிடுமே
நிறைவான வாசம் .
உலாவந்திடும் கவிதைகளின்
உன்னதமானக் காடு -- அதன்
உயர்வுதனைப் பாடு -- நல்
உள்ளமதை நாடு -- உயர்
உணர்வுகளின் இருப்பிடமாம்
உறவுகளின் வீடு .