உன்னை காணாமல் நான்

என் மகிழ்ச்சி, நீ அருகில் இருபதினால்
என் மரணம், நீ தொலைவில் இருப்பதினால்
சாலை இன்றி நடந்தேன், உன் சந்திப்பின்றி
கவலை ஓடம் படர்ந்தேன், என் கண்ணிறிலே
தூது வந்த துன்பம், உன் துணையில்லாமல்
தூவும் அந்த துயரம், உன் அருகில் இல்லையே,
காலைதென்றல் உன் கண்கள் என்று கடந்தே
காகிதம்போல் திக்கற்று திரிந்தேன்,
யார் வாக்கியம் வாய்பார், உன் நாமத்தையே
நான் சௌக்கியம் என்று, அறுதல் அடையேன்
பேச என்னும் பொழுது மறதி என்னும் சாபம்
பேச்சிழந்த பொழுது, என் மனது கொண்ட கோபம்
சுட்டெரிக்கும் சுழியாய் சுற்றும் உந்தன் மாயம்
சூழ்நிலைதான் என்று, அறுதல் என்னும் காயம்
புறமெல்லாம் புன்காட்டும் பூக்களும் என்னை வெறுக்க,
அகம் மட்டும் ஆனந்தம் கொள்ளும் அன்பே நீ...
என்னில் இருக்க.....