அவள் முகம் பார்க்காமலே
முன் இருக்கை
முகம் தெரியவில்லை
தூரக் களைப்பில் நான்
நீட்டிய காலை மிதிக்கும்
உன் பாதணிகள்
சட்டென்று நான் எடுத்துக்கொள்ள
பேருந்து நிறுத்தத்தில்
நழுவிய என் காலை
வருடும் உன் கால் விரல்கள்
நியாகத்தான் இருக்கவேண்டும்
என்னைத் தீண்டியது
நீயாக மட்டும்தான் இருக்கவேண்டும்
எனவே, அவள் முகம்
பார்க்காமலே செல்கிறேன்.