பேராசை பெரும் தரித்திரம்

ஒரு இளைஞன் மீன் பிடிக்க கடலுக்கு சென்றான்
அங்கு அவன் வலையை வீசும் முன்
புனித அந்தோனியாரை பார்த்து வேண்டினான்
தனக்கு நிறைய மீன் பிடிபட வேண்டும்
அப்படி பிடிபட்டால் முதலில் பிடிபடும் மீனை
உனக்கு காணிக்கையாக தந்து விடுவேன் என்று
வேண்டுதல் செய்து விட்டு வலையைக் கடலில் வீசினான்
, முதல் முறையில் அவனுக்கு நல்ல பெரிய மீன் பிடிபட்டது ,
உடனே அவனுக்கு அந்த மீனை அந்தோனியாருக்கு கொடுக்க
மனம் வரவில்லை அவன் யோசித்தான்
இந்த மீனை நான் எடுத்துக் கொண்டு
இனிப் பிடிக்கும் மீனை அந்தோனியாருக்கு கொடுப்போம்
என்று சொல்லி கரையிலே அந்த மீனை பாதுகாப்பாக வைத்து விட்டு
மீண்டும் கடலில் வலையை வீசினான்
, அவனது எண்ணம் கடவுளுக்கு புரியாதா
கரையில் பத்திரமாக இருந்த மீன் மெல்ல இறங்கி கடலுக்குள்
சென்று விட்டது
அந்தோனியாரின் வல்லமை அவனுக்கு விளங்கவில்லை
தான் சொன்னது ஓன்று செய்தது ஓன்று
என்பதை அவன் உணரவில்லை
அவன் மீண்டும் பிடித்த மீன்களுடன் கரைக்கு வந்து பார்த்த போது
தான் பத்திரமாக வைத்து விட்டு சென்ற அந்த மீனைக் காணவில்லை
அப்போது தான் அவன் உணர்ந்தான்
இந்த அந்தோனியாருக்கு பகிடியும் தெரியாது வெற்றியும் தெரியாது
மீனை கடலுக்குள் அனுப்பி விட்டார் என்று
பேராசை பெரும் தரித்திரம் என உணர்ந்தான்
தன் வினை தன்னை சுடும் ,
என்று தன்னைத் தானே வைது கொண்டு வீடு திரும்பினான்
வார்த்தை தவறாதே ,

எழுதியவர் : பாத்திமாமலர் (26-Apr-16, 8:35 pm)
பார்வை : 465

மேலே