உன் திண்டலில்

கைக்குள் அடங்கும் பிம்பம், நகம் மிளிர படருதே
கதை சொல்லும் ரேகைகள், விடை சொல்ல மறக்குதே
ஐ விரல்களின் மாயம், ஐஇரு பிம்பம் காட்ட
ஐயமில்லா அனைப்பு நடுக்கம் மட்டும் ஏனோ...
உணர்வின் உச்சம், உன் கரம் கோர்கையில்
உள்ளத்தின் அச்சம், கை நிறங்கள் வேற்கையில்
தொடுவானம் தகழுதே, உன் தோடு விரல் படுகையில்,
தொகை மயிலென விரிந்தே மனம்
தூவான மழைசாரலில் மனம் உருகுதே...