உழவர்

உழவன்

உலகின் உயிரே
உழுதிடும் உழவன் கையில்

உழவில் உழைப்பேன்
உண்ண உணவை அளிப்பேன்!
உலகின் இயற்கையை
உழுது உழைப்பில் காப்பேன்!

கழனியை நிறைப்பேன்
கனிந்த கனிகளை தருவேன்!
தரணிக்கு உணவிட
தரமுடன் காய்கறி தருவேன்!

பசுமையை காப்பேன்
பார் குளிர் மழையை தருவேன்!
பசுவை வளர்த்து
பசிக்கு சிசுப்பால் தருவேன்!

வனத்தை வளர்ப்பேன்
வாழ்க்கைக்கு முச்சை தருவேன்!
வளமை நிறைத்து
வனமகிழ் உயிர்களை காப்பேன்!

மலையை காப்பேன்
மழையுடன் நாட்டு வளமை தருவேன்!
மருதம் முல்லையாய்
மலருடன் மன மகிழ் தருவேன்!

மண்ணை காப்பேன்
மனித நல மூலிகை தருவேன்!
மானும் மயிலும்
மகிழ்ந்திட மரங்களை காப்பேன்!

கதிரவன் விழிக்கும் முன்பே
கழனியில் கண் விழிப்பேன்
காற்றிலும் புயலிலும்
கலங்காது பயிரினை வளர்ப்பேன்

உழைப்பே உயிரென
உலகே உறவென உழைப்பேன்!
உழவனின் வியவை துளியே
உலகினின் உயிர்க்கு உணவென்பேன்!

ஆனால் என்னை மட்டும் ஏன்
யாரும் கண்டுகொள்வதில்லை?

பிரியமுடன்
அசுபா

எழுதியவர் : அசுபா (27-Apr-16, 6:59 pm)
Tanglish : uzhavar
பார்வை : 113

மேலே