முகம் காண ஆசை

இருபத்து இரண்டு ஆண்டு முடிந்தது.. படித்தேன் , பட்டதாரியும் ஆனேன் , என்னை ஆளாக்கிய முகத்தை காணமல் தவிக்கிறேன் ...

இடை வெளி அதிகமா அல்ல இருக்கும் தூரம் அதிகமா, என்று தெரியவில்லை:

முகத்தை பார்க்க முடியவில்லையா அல்லது முகத்தை பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லையா என்று தெரியவில்லை ,

நினைவில் இருகிறேனா அல்லது அவள் கொடுத்த நிழலில் இருக்கிறேனா என்று தெரியவில்லை ,


அவளின் கண்களில் வாழ்கிறேனா அல்லது அவள் கண்களில் இருந்து வந்த கண்ணீர் துளிகளில் வாழ்கிறேனா என்று தெரியவில்லை ,

ஆசைகளே இல்லையா அல்லது ஆசைகளை எனக்காக துறந்தாளா என்று தெரியவில்லை ;

பாடம் கற்க வில்லையா அல்ல நான் கற்க வேண்டும் என்பதற்காக படித்த பாடத்தையே மறந்தாளா என்று தெரியவில்லை,

பேசுவதற்கு வார்த்தை இல்லையா அல்லது பேச வாய்ப்பே கிடைக்கவில்லையா என்று தெரியவில்லை,

தன்னை மறந்தாளா அல்லது எனது நினைவால் அவளையே மறந்தாளா என்று தெரியவில்லை ;

காலத்தை கடந்தளா அல்லது என்னை எதிர்பார்த்து காலத்தை கடத்தினாளா என்று தெரியவில்லை ....

சில நாள் வயிற்றினில் சுமந்து சில
நாள் இடுப்பினில் சுமந்து பல நாட்களாய் மனதில் சுமக்கும் அந்த முகத்தை காண்பேனா அல்ல காணாமல் எனது உயிரை துறப்பேனா என்று தெரியவில்லை....

கண்ணீர் துளிகள் எனது கண்களில் வர, அந்த துளிகளை நான் துடைக்கும் முன்னே எனது கண்ணீரை துடைக்க இனி ஆவது வருவாளா இல்லையா என்று தெரியவில்லை...

எழுதியவர் : அருண் (28-Apr-16, 3:22 am)
Tanglish : mukam kaana aasai
பார்வை : 257

மேலே