தனலட்சுமியின் ஆசை
தனலட்சுமியின் ஆசை
ஆடைகள்
ஒன்று வாங்கினால்
ஒன்று இலவசம்
காலணிகள்
பாதி விலையில்
இனிப்புகள்
குறைந்த விலையில்
எப்படியாவது
இந்த முறையாவது
குழந்தைக்கு வாங்கி
கொடுத்துவிட வேண்டும்
மனதில் நினைத்தபடி
கடை விளம்பரங்களை
கடந்து சென்றாள்
தினக் கூலிக்கு செல்லும்
தனலட்சுமி