அன்புள்ள அம்மாவுக்கு

நெஞ்சுல உதச்சாலும் தலைய
திருப்பி எனக்கு பால் கொடுத்து
தெம்பா உதடான்னு என்ன
திரும்ப திரும்ப பாத்து சிரிச்ச!

நடைபழக நான் நடக்க!
என்கூட சேந்து நீ நடக்க!!
பாதை முள்ளில் பாதம் படாம
பக்குவமா என்ன பாத்துகிட்ட!!

அஞ்சு வயசுல அழுதுகிட்டே
பள்ளிபோக - அரைமணி கூட பிரியாம
பள்ளி சன்னலுல வந்து நின்னு
புள்ள படிக்கிறத நீ பாத்த!

பத்தாவது பரிச்சைக்கு பாடுபட்டு
நான் படிக்க - பாதி நேரம்
தூங்காம என்ன படிச்ச நீ எனக்காக !
பன்னிரண்டு வந்ததும் அந்த
பாதியும் போய்டும்னு தெரிஞ்சுதான்
இருந்தியா தெய்வமே என்கூட !!

பத்துகல்லு தாண்டி கல்லூரி நான்போக!
கூட வரணும்னு வராம நீ அழுக !
நான் படிச்ச வருஷமும் உனை பிரிஞ்சு
நரகமா தான் போனதம்மா !!

கூட படிச்சவங்கள என்கூட பிறந்தவங்களா
நீ நெனச்சு வேண்டியதெல்லாம்
சமைச்சு போட்டு வெகுளியாவே நீ இருந்த !!

புள்ளைக்கு வேலைகிடைக்க வெள்ளி
விடாம வெளக்கேத்தி - நீ
வேண்டாத தெய்வமில்லை எனக்கு தெரிஞ்சு!

வேண்டிய தெய்வமெல்லாம் வேலையில்லா
திண்டாட்டத்தால் வெளிநாட்டில் வேலைன்னு
சாபத்தை கொடுத்தத்ம்மா !!

வேலைக்கு வெளிநாடு நான்செல்ல
வேளாவேளைக்கு சாப்பிட சொல்லி
உன் உசுரு என்னோட - வெறும்
உடலா என்ன செய்ற என் தாயி !!

அழைப்புமணி அடிக்கும் போதெல்லாம்
அடிச்சு புடிச்சு நானெடுக்க !
அங்க இங்க கஷ்டபட்டு - மாசம்
நான் அனுப்பும் அந்தபணம்
உனக்கு போதுமாம்மா !!

மருமக வந்துட்டா மகன பாத்துப்பான்னு
மாமன் மகள நீ புடிச்சு
மனைவின்னு கட்டி வச்ச!
என் மாமன் மகள நீ புடிச்சு
மனைவின்னு கட்டி வச்ச !!
வெளியிருந்து வந்தவளுக்கு இந்த
வெவரமெல்லாம் தெரியாதும்மா !!!

தனியே தான் போகணும்னு
தலைகீழா அவளும் நிக்க - என்
தாய விட்டுப் போகமுடியாம
நானும் இங்க தவிச்சு நிக்க!
புள்ள தவிக்கிறது பொறுக்காம!
தன்னத் தனியாக்கி தன்னந்தனியா
போனியே என்ன சொல்ல என் தாயி !

நாளும் கிழமையுமா நான் பாக்க
வந்தேன் உன்ன - நல்லாருக்கியான்னு
சோறுஉருண்டை புடிச்சு கொடுத்த நீயும்!
கொடுத்த உருண்டையும் நெஞ்சில்
கெண்ட முள்ளா சிக்குதம்மா !!

அறுபது போதும்னு அடிக்கடி நீ சொல்லி
அதோட ஒண்ணு கூட - உன்
ஆய்ச முடிச்சுகிட்டு எங்க போன !
உசுரு போச்சுதுன்னு ஊர்கூடி அழ
எனக்கு தெரியும் உன்னுசுரு என்கூட !!
தீய வெச்சு திரும்புறப்போ - எனக்கு
திக்கு ஏதும் தெரியலையே !!!

அஞ்சு வயசுல பிரிஞ்ச என்னால
ஆய்சுக்கும் உன்னோட சேரமுடியலையே !
அடுத்த சென்மம் இருந்துச்சுன்னா
இதுமாதிரி எனக்கு வேணா !!
ஆயசுக்கும் கூடவே வளரணும்னு
வரத்த நீயே கொடுத்துடும்மா !!!

எழுதியவர் : விக்னேஷ் குமரவேல் (26-Apr-16, 5:02 pm)
Tanglish : anbulla ammavuku
பார்வை : 522

மேலே