தினம் ஒரு பாட்டு இயற்கை - 3 = 89

கருமேகம் படை சூழ்ந்து வெண்நிலவை மறைக்கின்றது
நிலவதுவும் ஒளியிழந்து கருமேகத்தைப் பழிக்கின்றது !
முழு நாளெல்லாம் திருநாளாம் நீலவான வீதியில்….
கண்கொள்ளாக் காட்சிகளாம் உலகப் பார்வையில்….!

காலைக் கதிரோன் தன்வேலை முடித்து
மாலை சந்திரனை வேலைக்கு அமர்த்துது !
லட்சோப லட்சம் நட்சத்திரம் நடுவே
ஒய்யார நிலவு வேலை வாங்குது….!

கவிஞனனின் கற்பனை; பொய்யின் ஒப்பனை !
நிலவின் ஒப்பனை; இயற்கையின் கற்பனை !
அகிலமெங்கிலும் இயற்கையின் இராட்சியம்
மனிதனின் செய்கைகள் அதனிடம் பூட்சியம் !

விசும்பும் குழந்தையின் அழுகையை நிறுத்த
அம்மா காட்டுவாள் நிலவின் முகத்தை…!
பசும்பால் போன்ற பருவ அழகை
நிலவுக்கு கொடுத்தது கடவுளின் கருணை..!

இயற்கை ஒன்றும் செயற்கையின் பிம்பம் அல்ல;
அதன் வளர்ச்சிப் பாதைக்கு எங்கும் தடைகள் இல்ல !
அயர்சியின்றி உழைக்கும் இயற்கை;
தளர்ச்சி என்றும் கொண்ட தில்லை… !

மனிதன் விதைக்கும் மாசுகளால்
ஓசோன் படலத்தில் ஓட்டைகளாம் !
ஆர்ட்டிக்கில் கரையும் ஐஸ் கட்டிகளால்
அழிவின் விளிம்பில் பல நாடுகளாம் !

விஞ்ஞானம் சொல்வதை விளையாட்டாய் எண்ணாதே
வினைகள் வந்தப்பின் தலையாட்டிச் சொரியாதே…!
எதையும் யோசிக்க உன்னால் முடியும்
தினமும் வாசிக்க புத்தகம் உதவும்… !

பொறுமை என்ற போர்க்களத்தில்
நம்பிக்கை என்ற விதையை விதைப்போம் !
அறுவடை செய்யும் விளை நிலத்தில்
அடுக்கங்கள் அணிவகுப்பதை தடுப்போம் !

எழுதியவர் : சாய்மாறன் (28-Apr-16, 9:43 pm)
பார்வை : 92

மேலே