புதியதோர் உலகம் செய்வோம்
வாழ்வதற்கா வழியில்லை தோழா,
வலிகள் வேதனைகள் தொலைத்துவிடு தோழா,
வீழ்ந்தவுடன் வருத்தமேன் தோழா,
விழிகளில் வீறு கொண்டு வெற்றிப் பெறு தோழா,
உழைத்து வாழ உறுதி கொள் தோழா,
ஏழைக்குப் பகிர்ந்து உண்ண கற்றுக் கொள் தோழா,
தாய்நாடு முன்னேற முயற்சிகள் எடு தோழா,
பிழைக்க அந்நியநாடு செல்வதை விடு தோழா,
அரசியல் பொருளாதார அறிவு பெறு தோழா,
அடுத்த சந்ததியினர்க்கு அதைப் பாடமாய்க் கூறு தோழா,
சாதி மத இன பேதங்களைப் புதைத்து விடு தோழா,
சமத்துவத்தை வேதமாக்கி உலகை வென்று எடு தோழா...!