என் அலுவலகம்

ஒவ்வொரு முறையும் அறிமுகம் தான்
எனக்கும், என் சட்டைக்கும்
காலரில் கரைபடிய ஆரம்பிக்கும் போதெல்லாம்
மனம் படபடக்கத்தான் செய்கிறது.
கரைபடிந்த கைகளில் கரன்சியை தொடுவோமா? என்று,
காத்திருந்து கால்பிடித்து வாரிட நினைக்கும்
சமூகத்தில், சத்தமின்றி என்னை நிலை நிறுத்த, உதவும்
நோக்கத்தில் - ஊர் கூடி பொதுமக்கள்
ஊக்கப்படுத்த, காதோரம் கன்னியவான்கள்
கரிசனம் காட்ட, தோல்தட்டி தோழர்கள்
தூக்கி நிறுத்த சற்று தெனாவெட்டாக தூக்கி
நிற்கிறது - என் சட்டை காலர்...

எழுதியவர் : புவன் (30-Apr-16, 12:21 pm)
Tanglish : en aluvalakam
பார்வை : 197

மேலே