என்னவளுக்கு மணவாழ்த்து

சிப்பிக்குள்
இருக்கும் முத்து
சிப்பிக்கு
சொந்தமில்லை என்று...

என் இதயத்தில் நீ இருக்க,
உன் தன் நினைவுகளை
பொக்கிஷமாய் கொண்டு
வாழ்கிறேன் இன்று...

பிரிவின் பழியை
உன்மீதோ என்மீதோ
காலத்தின் மீதோ
சொல்லிக்கொள்வதில்
அர்த்தமில்லை...

கால ஓட்டத்தில்
இன்னொரு இதயத்தோடு
கைகோர்க்கும்
மணப்பெண்ணாய் நீ....

உன்னை
உரிமையாய் தத்தெடுத்த
என் தன் இதயம்
வாழ்த்துகிறது கவிதையாய்...

என்றொன்றும்
அழகான வாழ்வில்...

அமைதியான புரிதலோடு,
ஆத்மார்த்தமான உறவுகளாய்...

ஆனந்தமான நிகழ்வுகளால்
மனசு நிறைய...

நிறைந்த அன்பால்
இதயம் நிறைய...

வாழ்க்கையென்ற
பூந்தோட்டத்தில்

இரு இதயங்களும்
ஒன்றாய் இணைந்து

சிறகடிக்கும்
வண்ணத்துப்பூச்சிகளாய்...

வாழ்வில் சிறக்க
வாழ்த்துகிறேன்...

எழுதியவர் : புகழ் வேதாரண்யம் (1-May-16, 8:16 pm)
பார்வை : 531

மேலே