ஒவ்வொரு செயலும்

மாவைக் கரைத்து
மறு நாள் காணி ன்
ஒரு புளிப்பு
பெருக்கம்.

தயிரை தோய்த்து
மறு நாள் காணின்
ஒரு புளிப்பு
ஒடுக்கம்.

இன்றைய வேலையை
முடித்து நாளை காணின்
ஒரு நிறைவு
ஊக்கம் .


ஒவ்வொரு செயலும்
இன்று போல்
நாளை இல்லை
மாற்றம்.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (2-May-16, 7:57 am)
Tanglish : ovvvoru seyalum
பார்வை : 477

மேலே