காதல் செய்வாளோ

வீசும் தென்றல் உரச
பூமரங்கள் உடல் சிலிர்க்க
பூக்கள் தூவக் காண்கிறேன்
அருகே அவள் வரும் போது......


கால்கள் காற்றில் மிதக்க
கண்கள் அவளையேப் பார்க்க
ஆயுள் அதிகம் கேட்கிறேன்
அலையாய் அவள் கடந்து போகும் போது......


காதல் செய்வாளோ?...
எனை தான் காதல் செய்வாளோ?...


முதல் முறை அவளை பார்த்ததும்
மூழ்கிப் போனேன்
அவள் ஈர விழிகளில்...
கவரி வீசவே கிறங்கிப் போனேன்
இமைகள் எனும் இரு சிறகுகளில்...


செவ்விதழ்களில் தேன் ஊறுதென்று
தேனீகளே ஏமாந்து போனதே...
முழு நீள இரவின் உச்சியில்
முல்லை பூவும் பூத்து சிரிக்குதே...


தேனிலவின் பிறை ஒன்று
தேவதையின் நெற்றி ஆனதே...
தேகத்தில் முளைத்த மோகத்தால் இதயம்
நெஞ்சை கிழித்து பஞ்சாய் பறக்குதே......


காதல் சொய்வாளோ?...
எனை தான் காதல் செய்வாளோ?...


பொன் முகம் விழுந்த பனியில்
மாமலையும் கடுகானதே...
உயிர் மூச்சின் சூட்டிலே
பனியோடு மலையும் மாயமானதே.....


மயில் தோகை மேனியில் சாய்ந்த
மதிய வெயிலோ?... மழைத் துளியாய்
மங்கையவள் போகும் இடங்களில்
கங்கைத் துளிகளாய் ஓடுதே......


ஜன்னல் திறந்த சாரல் காற்றாய்
அணிந்த தாவணி வதனம் தீண்ட
வஞ்சிக் கொடியின் வசீகர வாசனையில்
செத்துப் போய் சிலையாய் நின்றேனே......


காதல் செய்வாளோ?...
எனை தான் காதல் செய்வாளோ?...

எழுதியவர் : இதயம் விஜய் (2-May-16, 8:21 pm)
பார்வை : 225

மேலே