கடல் கரையில்
கடல் கரையில்
கடல் கன்னியவள் கலை அழகுடன்
காற்றின் தாலாட்டில் தலை அசைக்க
காதலுடன் நானும் அவளை நோக்க
சூரியனும் கோபமுற்று முகம் சிவக்க
காலத்தால் அழியாத காவியமாய்
காட்சி ஒன்று அங்கு மலர்ந்தது
கண்களில் ஓவியமாய் விரிந்தது
காணக்கிடைக்காத அந்த ஒரு நிமிடம்
கடந்தபின்னும் உள்மனதில்
கடல்மண்ணில் கால் பதித்தது போல்
ஆழமாக நிலைத்து நின்றது
இயற்கையின் விந்தையம்மா