நானாகவல்ல

இடத்தை விடாதே
பிடித்துக் கொள்
சட்டென்று.

கேட்டவுடன் சற்று
துணுக்குற்றேன்
சில மணித் துளிகள்.

பின் சிரித்தேன்
எனக்குள்ளே
அதிராமல்.

இடமே இல்லை
எதைப் பிடிப்பது
சிந்தித்தேன்.


நேராக அனுபவித்தால்
தான் தெரியும்
நினைத்துக் கொண்டேன்.


சிறுமையும் சீற்றமும்
மோத முட்ட
விலகினேன் .


தாங்க முடியாத போது
தள்ளப்ட்டப் போது
வெளியே வந்தேன் .

நானாகவல்ல என்பது
சொன்னாலும் புரியாது
புரியவே வேண்டாம்
யாருக்கும்.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம், (3-May-16, 12:06 pm)
பார்வை : 402

மேலே