ராயின் கட்டுரை வாங்கினால் அம்பேத்கர் இலவசமா - ந வினோத் குமார்

ஒரு சின்னத் தேடல். கூகுளில் ஆங்கிலத்தில் ’அனிஹிலேஷன் ஆஃப்
காஸ்ட்’ (Annihilation of Caste) என்று தேடிப் பாருங்கள். அம்பேத்கர் எழுதிய
புத்தகத்தின் அட்டைப்படம் வரும் என்று நினைத்தால் தவறு. மாறாக,
அருந்ததி ராய் எழுதிய அறிமுகத்துடன் ‘நவயானா’ பதிப்பகம்
வெளியிட்ட ‘அனிஹிலேஷன் ஆஃப் காஸ்ட் தி அனிஹிலேஷன் ஆஃப்
க்ரிட்டிக்கல் எடிஷன்’ புத்தகம் தான் வரும். அமேசான் முதற்கொண்டு
அனைத்து இணைய விற்பனை தளங்களிலும் இந்தப் புத்தகம்
கிடைக்கும் என்று கூகுள் அறிவிக்கும்.

இந்தப் புத்தகம் 2014-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அம்பேத்கர்
எழுதிய புத்தகத்துக்கு அருந்ததி ராய் ‘ தி டாக்டர் அண்ட் த செயிண்ட்’
என்று முன்னுரை எழுதியுள்ளார். ‘பேப்பர் பேக்’ (மெல்லிய அட்டை)
வடிவத்தில் 415 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தில் சுமார் 180
பக்கங்களுக்கு அருந்ததி ராயின் முன்னுரையே விரிகிறது. அம்பேத்கரின்
அந்தப் புத்தகம் வெளியானபோது சற்றேறக்குறைய 70
பக்கங்களுக்குத்தான் இருந்தது. அப்போது அதன் விலை எட்டு அணா.
இன்று வரையிலும் அம்பேத்கரின் எழுத்துக்களை வெளியிடும்
பதிப்பகங்கள், தலித் எழுத்துக்களை வெளியிடும் பதிப்பகங்களைப்
போன்றவை. அந்தப் புத்தகத்தை எளியவர்களும் வாங்கும் வகையில்
மலிவு விலையில் விற்பனை செய்துவருகின்றன. ஆனால்,
‘நவயானா’வின் புத்தகம் 2014 –ஆம் ஆண்டு வெளியிடப்பட்டபோது அதன்
விலை 525 ரூபாய்.
’ஹேட்ரட் இன் தி பெல்லி’ [Hatred in the Belly] எனும் புத்தகம்
‘நவயானா’வின் ‘அனிஹிலேஷன் ஆஃப் காஸ்ட்’ புத்தகத்துப் பின் உள்ள
அரசியலை ஆராய்கிறது. ‘தி ஷேர்டு மிரர்’ பதிப்பகம் கடந்த ஆண்டு
இறுதியில் இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளது.
அம்பேத்கர் அந்தப் புத்தகத்தில் காந்தியைப் பற்றிப் பின்
இணைப்பில் மட்டும் குறிப்பிடுகிறார். ஆனால் அருந்ததி ராயோ. இந்த
முன்னுரையில் அம்பேத்கரையும் காந்தியையும் ஒப்பிட்டு எழுதுகிறார்
என்று இப்புத்தகம் குறிப்பிடுகிறது. அருந்ததி ராய், தனது சித்தாந்தம்
சார்ந்து காந்தியை விமர்சிப்பதற்கு அம்பேத்கரின் இந்நூலைப்
பயன்படுத்திக் கொண்டதாகவும் விமர்சிக்கிறது இந்நூல்.

குடி அரசில் வெளியான அம்பேத்கரின் எழுத்து.
1936 –ம் ஆண்டு இந்துமத சீர்திருத்தக் குழு என்று கூறிக்கொண்ட
’ஜாத் பட்தோடக் மண்டல்’ என்ற அமைப்பின் மாநாட்டில் இந்து சமூக
அமைப்பில் நிலவும் சாதியத்தின் கொடுமை பற்றிப் பேச அம்பேத்கர்
அழைக்கப்பட்டிருந்தார். அதற்காக அவர் உரை ஒன்றைத்
தயாரித்திருந்தார். ஆனால் அந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட்டதைப்
பலரும் எதிர்த்தனர். அதனால் அம்பேத்கர் தன்னுடைய உரையை
வழங்க முடியாமல் போனது. பின்னர், அதனை ஒரு புத்தகமாக்கி
விநியோகம் செய்தார்.
அந்தப் புத்தகத்தின் முதல் மொழி பெயர்ப்பு தமிழில் பெரியார்
நடத்திய ‘குடிஅரசு’ இதழில் வெளியானது. என்பது குறிப்பிடத்தகது!
1936 –ம் ஆண்டிலிருந்து இன்று வரையிலும் பல பதிப்புகள் கண்டது
அந்த நூல். பல கோடிக்கணக்கானவர்களிடையே ‘சாதி ஒழிப்பு’ குறித்து
விழிப்புணர்வு ஏற்படுத்திய புத்தகம் இது. இந்நிலையில் தான் ‘நவயானா’
அந்தப் புத்தகத்தை மீண்டும் பதிபித்தது. அம்பேத்கரின் மூலப்
புத்தகத்துக்கு, அடிக்குறிப்புகள் கொடுத்து, அருந்ததி ராயின்
முன்னுரையையும் கொடுத்து அந்தப் புத்தகத்தை ‘நவயானா’
பதிப்பித்தது. அம்பேத்கரையும் காந்தியையும் ஒப்பிட்டு எழுதியிருந்த
அருந்ததி ராயின் முன்னுரை பல்வேறு தரப்பு மக்களிடையே
கண்டனத்துக்கு உள்ளாகியது. அதைத் தொடர்ந்து எழுந்த விவாதங்கள்,
முகநூல் பதிவுகள், பத்திரிகைளில் வெளியான கட்டுரைகள்
ஆகியவற்றில் முக்கியமான சில படைப்புகளைத் தேர்வு செய்து
தொகுக்கப்பட்டு ‘ஹேட்ரட் இன் தி பெல்லி’ என உருவாகியுள்ளது. தலித்
அறிவியக்க ஆளுமைகள் இது குறித்து அருந்ததி ராயிடம் எழுப்பிய
கேள்விகளுக்கு ராய் கொடுத்த பதிலும் இப்புத்தகத்தில்
இடம்பெற்றுள்ளது

அருந்ததி ராய்க்கு எதிர்ப்பு
’ஹேட்ரட் இ தி பெல்லி; எனும் இந்தப் புத்தகத்துக்கான தலைப்பு,
ஜூபாகா சுபத்ரா எனும் தெலுங்குக் கவிஞர் ‘நவயானா’வின்


புத்தகத்துக்கு எதிராக நடைபெற்ற விவாதம் ஒன்றில் பயன்படுத்திய
‘கடுப்புலோ கசி’ எனும் வார்த்தைகளின் ஆங்கில வடிவமாகும். தமிழில்
அதனை ‘வயிற்றெரிச்சல்’ என்று சொல்லலாம்.

’உங்களுக்கு இன்னும் அறிவு போதாது. நாங்கள் எடுத்துச்
சொல்கிறோம்’ என்கிற ரீதியில். அம்பேத்கரின் புத்தகத்துக்கு அறிமுகம்
கொடுப்பது மிகவும் கீழ்த்தரமான செயல் என்று வாதிடுகிறது இந்தப்
புத்தகம். ‘நவயானா’வின் இந்தப் புத்தகம் வெளியான சில மாதங்களில்
அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேசுவதற்கு
அருந்ததி ராய்க்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அங்கு ‘ நான் காந்தியைப்
பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதினேன். ஆனால், அது எங்கே மக்களிடம்
எதிர்ப்பைச் சம்பாதிக்குமோ என்று எண்ணியதால், அதைத் தனிப்
புத்தகமாக வெளியிடவில்லை. எனவே, அதனை அம்பேத்கரின்
புத்தகத்தில் முன்னுரையாக இணைத்துவிட்டேன்’ என்று
வெளிப்படையாகக் கூறிய தகவலையும் இந்தப் புத்தகம் பதிவு
செய்கிறது.

காந்தியைப் பற்றிய ராயின் கட்டுரையை வாங்கினால் அம்பேத்கர்
இலவசமா? என்ற கேள்வியை இப்புத்தகம் எழுப்புகிறது.
@@@@@@@@
நன்றி: ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் – ஞாயிறு ஏப்ரல் 17, 2016


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Suzanna Arundhati Roy (born 24 November 1961) is an Indian author who is best known for her novel The God of Small Things (1997), which won the Man Booker Prize for Fiction in 1997. This novel became the biggest-selling book by a nonexpatriate Indian author. She is also a political activist involved in human rights and environmental causes.
Arundhati Roy was born in Shillong, Meghalaya, India, to Rajib Roy, a Bengali Hindu tea plantation manager from Calcutta and Mary Roy, a Malayali Syrian Christian women's rights activist from Kerala. When she was two, her parents divorced and she returned with her mother and brother to Kerala. For a time, the family lived with Roy's maternal grandfather in Ooty, Tamil Nadu. When she was the family moved back to Kerala, where her mother started a school. நன்றி: விக்கிபீடீயா
@@@@@@@@@@@@@@@@@@

எழுதியவர் : ந. வினோத் குமார் - தி இந்து (4-May-16, 5:18 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 151

மேலே