கசிந்து படுத்துவதற்கு
படுக்கிறேன் காலை நீட்டி
ஆயாசமாகத் தோன்ற
கண் அயரும் முன்
தலை முழு வதும் ஈரம்
துவட்டிக் கொண்டு
சாய்கிறேன் அனாயசமாக
கண்களைப் பொருத்தும் போது
கழுத்து இடுக்குக்குள் ஈரம்.
எழுந்து அமர்கிறேன்
பிரயாசையுடன் மெதுவாக
கண்களோ முடி திறக்க
கைகளில் ஈரம் .
நிற்கலாம் சற்று நேரம்
எனறு தோன்ற
நிற்கிறேன் ஒரமாக
கால்வழியே வடிகிறது ஈரம்.
என்னைச் சுற்றி ஈரமே இல்லை
வறண்ட காற்று வீச
நிலம் நீர்இன்றி வெடிக்க
வெயில் சுட்டெ ரிக்க
எங்கிருந்து ஈரம் என்னிடம் .
கசிந்து படுத்துவதற்கு?