சிந்துப்பாடல் --- காவடிச்சிந்து --4

தண்டமிழும் தண்ணொளியில் வென்று -- மனம்
தத்தளித்து ஆர்ப்பரித்துச் சென்று -- அந்தத்
தாயவளின் பண்புமிகு சேயெனவும் சொல்லிநிதம்
ஆடு -- கவி
பாடு .


தண்ணளிக்கும் செல்வமதை வார்க்கும் -- பல
தன்மைகளை நம்மிடத்துச் சேர்க்கும் -- அந்தத்
தன்மையளின் பொன்னடியை இன்பமுடன் பற்றிநிதம்
பாடு -- இசை
போடு .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (4-May-16, 12:35 pm)
பார்வை : 76

மேலே