விட்டாச்சு லீவு--மீள்பதிவு

...................................................................................................................................................

ஜுக்கு ஜுக்கு ஜூ ஜூ ஜுக்கு ஜுக்கு ஜூ
ஜுக்கு ஜுக்கு ஜூ ஜூ ஜுக்கு ஜுக்கு ஜூ
ஜுக்கு ஜுக்கு ஜுக்கு ஜுக்கு
ஜுக்கு ஜுக்கு ஜூ ஜூ...

சண்டே மண்டே எல்லா நாளும்
ஒண்ணில் ஒண்ணாச்சு;
கண்ட நேரம் ரெண்டு பட்டு
வீடு நின்னாச்சு!
விண்ணுண்ணுதான் வெய்யில் ஏற
வந்துடுச்சி லீவு... ! ( ஜுக்கு ஜுக்கு...

புத்தகப் பை பரணேறி
பொம்மை வருது;
அக்கம் பக்க பொடிசுகள்
ஆட்டம் கூடுது!
கத்திக்கத்தி தொண்டை காயும்
காபி கொஞ்சம் போடு... ! ( ஜுக்கு ஜுக்கு...

கட்டடத்து ஜன்னல் கொஞ்சம்
காயம் படுது;
வெட்டி வச்ச பொட்டல் ஏரி
விளை யாடுது;
மூணு பந்தில் ஆறு ரன்னு
மூக்கொடிஞ்சு போச்சு.... ( ஜுக்கு ஜுக்கு...

பத்தரைக்கு முழிச்சா
பசியெடுக்கும்...
அத்தனைக்கும் பத்துத் தீனி
அரவை படும்...
பெத்தவங்க உத்தியோகம்
நேரம்தள்ளிப் போச்சு ...! ( ஜுக்கு ஜுக்கு...

பாய்ச்சலின்னா பாய்ச்சல் நல்ல
படுத்தல் வரும்;
மேய்க்க முடியில்லயின்னு
புலம்பல் வரும்...!
பார்த்தவரை பார்த்து விட்டு
பாட்டி ஊரு போறோம்.. ! ( ஜுக்கு ஜுக்கு...
................................................................................................................................................................................................

எழுதியவர் : அருணை ஜெயசீலி (6-May-16, 12:26 pm)
பார்வை : 85

மேலே