கை காட்டி மரம்

கை காட்டி மரம்
சாய்வாக நிற்கிறது
ஏதும் சந்தேகமோ
காட்டுமிடம் இல்லையோ?


செல்வதா வேண்டாமா
காட்டும் வழியில்
நிதானிக்கிறேன் சற்று
வழி தெரியாமல்.


போகும் இடமே
கேள்விக் குறியாக
இருக்கும் பொழுது
எங்கு செல்வது ?


நிற்கறேன் நேரமாக
புலப்படாத மனதுடன்
வாழ்விலும் அது போலவே
புரியாமல் தடுமாறுகிறேன்.

பாதி வழி க்டந்து விட்டேன்
எவ்வாறு என்று அறியாமல்
மீதியும் கடந்து விடும்
இது போலவே புரியாமல்.

நினைத்துப் பார்க்கிறேன்
எதற்குப் பிறந்தேன்?
பிறந்து என்ன செய்தேன்?
வாழ்ந்து என்ன செய்கிறேன்?


ஒரு கை காட்டி மரம்
எனக்கு புத்தனாக
பகவத் கீதையாக
திருக்குறளாகத் தோன்ற


நிற்கிறேன் கால் கடுக்க
வெகு நேரமாக
மரம் போல்
கை காட்டி மரமாகவே!

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (6-May-16, 2:05 pm)
Tanglish : kai kaatti maram
பார்வை : 2744

மேலே