கொஞ்சும் நினைவுகள்
உன் பார்வையில்
தொலைந்த நொடிகள்
உன் வருகையில்
மகிழ்ந்த நிமிடங்கள்
உன் வார்த்தைக்காக
ஏங்கிய நாட்கள்
உன் ஓசைக் கேட்டு
திரும்பிய தருணங்கள்
உன் வாசம் பட்டு
மயங்கிய பொழுதுகள்
இன்னும் எத்தனை
எத்தனையோ நினைவுகள்
உன்னுடன்
நினைத்துப் பார்க்கிறேன்
கொஞ்சம் கொஞ்சமாய்!!!

