10 செகண்ட் கதைகள் - ஆறுதல் வார்த்தை

திரும்பத்திரும்ப பிரச்சனைகளில் சிக்கி தவிக்கும் அந்த குடும்பத்திற்கு ஏழ்மையும் ஒரு முக்கிய காரணம்; இது தவிர அவ்வப்பொழுது உடற்கோளாறுகள் வந்து வதைத்து வாட்டிச்செல்லும் போது ஒரு வித சலிப்பும் வெறுப்புமே வீட்டுக்குள் குடியிருக்கும், மனிதம் தாங்க முடியாத வதையில் சிக்கி வாடும் போது அக்கம் பக்கம் இருக்கும் குடும்பங்களிலிருந்து ஆறுதல் வார்த்தைகள் கோடை மழை போல் வந்து விழுகின்றது.

அதில் ஆசுவாசப்பட்டுக்கொண்டு துயரத்தின் பிடியில் இருந்து விடுபட்டு எழுந்திருக்கையில் நாலு வீடு தள்ளி ஒரு சலிப்புக்குரல்:

"யாருக்குத்தான்யா கஷ்டமில்ல, இவன் என்ன பண்ணுனானோ?
அவன் அவன் என்ன என்ன பாவம் செஞ்சதுக்கு இப்ப அனுபவிக்கிறான்"
என்று ஒரு குரல் சன்னமாக ஒலித்தது.

இதைக்கேட்டதும் சலிப்படையும் மனதுக்கு வீட்டின் அடுக்களையிலிருந்து ஒரு குரல்:

" யாரோ என்னமோ சொல்லிட்டு போறாங்க, உங்க வேலை எதோ அத பாருங்க. நலிந்தவனுக்கு நாராயணன் துணை ! "

எழுதியவர் : செல்வமணி (6-May-16, 10:22 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 161

மேலே