வறுமை விழிகள்

விவசாயத்திற்கு வித்தாக உலகிற்கு
உணவளிக்கும் நாட்டிலே! சான்வயிற்ருக்கு
செத்துப்பிழைக்கும் சூழலென்று மாறுமோ ?

செல்வந்தர்கள் செழித்தொரு குறையிள்ளது
உறங்கையிலே! மறுப்பக்கம் மனக்குறையோடு
வாழ்கின்ற ஏழையின் காலமென்று மாறுமோ ?

பிஞ்சுநெஞ்சங்கள் பாசமுடன் விளையாடும்
பருவத்திலே! பஞ்சுபாதங்கள் ஊதியத்திற்கு
உழைக்கும் வேலையென்று மாறுமோ ?

அருவகையை நாவும் சுவைக்க
ஆசை கொள்கையிலே! வயிற்ற்றுக்கு
ஈரஆடை கட்டியுறங்கும் இரவுகலென்று மாறுமோ ?

மிதிவண்டியை மிதிக்கும் கால்கள்
களைப்பாற சற்று அமர்கையிலே!
மகிழுதற்கே வேட்கைகொள்ளும் காலமென்று மறையுமோ ?

உறவுகளோடு வாழ்வு மகிழும்
வாசத்திலே! வெற்றுக் காசுக்காக
பாசத்தைக் கூறிடும் நெஞ்சங்கலென்று மாறுமோ ?

இருக்கும்வரை மனம் இன்பம்கொள்ள ஆசை!
இறந்த பின்பும் ஏழை
உடலெடுக்க உள்ளமில்லா மனங்கலென்று மாறுமோ ?

ஆண்டவரெல்லாம் ஆரசுக்கு உழைக்கும்
நாட்டிலே! உழைப்போரின் உரிமைப்பரிக்கும்
ஆரசியல் என்று மாயுமோ ?????????

எழுதியவர் : காமேஷ் (6-May-16, 10:45 pm)
பார்வை : 89

மேலே