காலத்தால் அழியா கலாம்

கட்டுமரக்காரன் கைகளில் ,
கடவுள் தந்த
கலங்கரைவிளக்கம் நீ !
எட்டு திக்கு தேடினாலும் ,
எட்டா புகழுடைய
எளியவன் நீ !

நரைநீள் முடியோடு ,
பிரைவாழ் வானம்போல்
கனவுகளை கானச் சொல்லி ,
இளைஞர்களின் இதயத்தின்
திரைதாழ் திறந்தவன் நீ !

அக்னியின் சிறகுகளில் அன்று ,
ஆகாசத்தில் பறந்தாய் ,
அடுத்தொரு உலகத்தை
ஆராய்ந்து பார்க்க இன்று ,
ஆவலோடு இறந்தனையோ !

சொற்பொழிவு உனக்கு என்றும்
பிடித்த ஒன்று தான் ,உன்
முன்னுரையை முடிவுரையாய்
முடித்த தினமும் இன்று தான் !
உறங்காமல் உன் இருகண்கள்
கண்ட கனவை எல்லாம் ,
இருநூறு கோடி விழிகள்
சேர்ந்து இனி காணும் !

கலங்காமல் போய்வா
காலத்தால் அழியா கலாமே!

எழுதியவர் : சிவகுமார் (7-May-16, 3:48 am)
சேர்த்தது : சிவகுமார் முத்து
பார்வை : 63

மேலே